கல்வியில் AI: IIT தில்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் வட்டமேசை மாநாடு

ஐஐடி தில்லியில் பிப்ரவரி 11, 2026 அன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த முக்கிய வட்டமேசை மாநாடு நடைபெற்றது.

கல்வியில் AI பயன்பாட்டை முன்னெடுத்து வரும் Vedantu, ConveGenius, Arivihan, SuperKalam உள்ளிட்ட 10 இந்திய ஸ்டார்ட்அப்களின் நிறுவனர்கள் இதில் பங்கேற்றனர்.
தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) இலக்குகளை அடைய கல்வி முறையில் AI-ஐ ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. தொழில்நுட்பம் அனைவரையும் உள்ளடக்கும் சக்தி வாய்ந்த கருவி என்றும், ‘விக்சித் பாரத் @ 2047’ நோக்கை அடைய AI முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


இந்த நிகழ்வு, பிப்ரவரி 12-13 நடைபெறவுள்ள ‘பாரத் போதன் AI மாநாடு’க்கு முன்னோட்டமாக அமைந்தது.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading