மோடி நல்ல மனநிலையில் இல்லை

டிரம்ப் கருத்துக்கு இந்தியா மறுப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது, இந்தியா-சீனா இடையே நிலவும் மோதல் பற்றி அவர் கருத்து தெரிவித்தார். இதுகுறித்து, டிரம்ப் கூறியதாவது: இந்திய பிரதமர் மோடியுடன் நான் பேசினேன். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான மிகப்பெரிய மோதலில் மோடி நல்ல மனநிலையில் இல்லை. இந்த நாட்டில் மீடியாக்கள் என்னை விரும்புவதை விட இந்தியாவில் அவர்கள் என்னை அதிகமாக விரும்புவார்கள் என நான் நினைக்கிறேன். மோடியை நான் […]

சீன எல்லையில் என்ன நடக்குது
நாட்டுக்கு உண்மை சொல்லுங்க
ராகுல் காந்தி கேள்வி

எல்லையில் இந்தியா-சீனா இடையே நடக்கும் மோதல் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முதன்முறையாக கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து, ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டரில் கூறியிருப்பதாவது: லடாக் மற்றும் சிக்கிம் பகுதியில் அமைந்திருக்கும் சீன எல்லையில் நிலவும் நிலவரம் குறித்த குழப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுகுறித்து, அரசு தெளிவுபடுத்த வேண்டும். எல்லையில் சீனாவுடன் நிலவும் நிலவரத்தில் அரசு தொடர்ந்து மவுனம் சாதிப்பது மிகப்பெரிய யூகத்துக்கே வழி வகுக்கும். மிகவும் நெருக்கடியான நேரத்தில் நிச்சயமற்ற […]

கோல்கத்தாவில் முக்கிய தீவிரவாதி கைது

ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ் (ஜேஎம்பி) என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த முக்கிய தீவிரவாதி அப்துல் கரீம் என்ற போரோ கரீமை கோல்கத்தா சிறப்பு அதிரடிப்படை போலீசார் நேற்று காலை கைது செய்தனர். முர்ஷிதாபாத் மாவட்டம் லங்கிபுர் பகுதியில் சுதி பிஎஸ் என்ற இடத்தில் மடக்கிப்பிடித்தனர். ஜேம்பி தலைவர் சலாகுதீன் சலேஹின் உட்பட பல தீவிரவாத தலைவர்களுக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுத்தவன் அப்துல் கரீம். 2014ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக […]

Back To Top