பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், “மகாராஷ்டிரா வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கிறது! நகராட்சி மன்றம் மற்றும் நகர பஞ்சாயத்துத் தேர்தல்களில் பாஜக மற்றும் மகாயுதி கூட்டணிக்கு வாக்களித்து ஆசி வழங்கிய மகாராஷ்டிர மக்களுக்கு நன்றி. இது மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சி குறித்த எங்கள் தொலைநோக்குப் பார்வையின் மீதான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், “மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனின் லட்சியங்களையும் நிறைவேற்றுவதற்காக, புத்துணர்ச்சியுடன் தொடர்ந்து பணியாற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அடிமட்ட அளவில் கடினமாக உழைத்த பாஜக மற்றும் மகாயுதி கூட்டணித் தொண்டர்களை நான் பாராட்டுகிறேன்,” என்றும் தெரிவித்துள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
