50 சதவீத மானியத்தில், மின்சாரத்தில் இயங்கும் தீவன புல் நறுக்கும் கருவி  தமிழக அரசு முடிவு

புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு, குறைந்தபட்சம் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகின்றன. மொத்த தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.15,000/- இவற்றில் எது குறைவோ அந்த தொகையே பின்னேற்பு மானியமாக தரப்படுகிறது.

சிறு, குறு விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில், மின்சாரத்தில் இயங்கும் தீவன புல் நறுக்கும் கருவிகள் வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பு கூறியதாவது:

“மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு தீவனம் மற்றும் அதற்கான உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நடப்பாண்டு மாநிலம் முழுவதும் உள்ள 3,000 சிறு, குறு விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில், மின்சாரத்தில் இயங்கும் தீவன புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட உள்ளன.

தீவன புல் நறுக்கும் கருவி ஒன்றின் விலை, 32,000 ரூபாய். இதில், 16,000 ரூபாய் மானியமாக வழங்கப்படும். தீவன புல் நறுக்கும் கருவிக்கான விலையில், 50 சதவீத பணம் செலுத்த தயாராக இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் உள்ள உதவி மருத்துவரை அணுகவும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இரண்டு பெரிய கால்நடைகள் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம், 0.25 ஏக்கர் தீவன சாகுபடி நிலத்தோடு, மின் வசதியை பெற்றிருக்க வேண்டும்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading