தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நான் ரெடி? கங்குலி விருப்பம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

“இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் ஆவது பற்றி நான் அதிகம் யோசித்தது இல்லை. ஏனெனில் பிசிசிஐயில் நான் நிறைய பொறுப்புகளில் இருந்துள்ளேன். 2013 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பிசிசிஐ தலைவராக பெற்றுப்பெற்றேன். அடுத்தடுத்து என்ன பொறுப்புகளில் இருக்கலாம் என்பது பற்றி நான் யோசித்ததில்லை. எனக்கு 50 வயது மட்டுமே ஆகிறது. எனவே இந்திய கிரிக்கெட்டிற்காக எந்த பொறுப்புகளிலும் இருக்க தயாராக உள்ளேன்.

தற்போது தலைமை பயிற்சியாளர் ஆவதற்கும் நான் தயாராக இருக்கிறேன். தலைமை பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பீர் சற்று மெதுவாகவே செல்கிறார். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என தொடர் தோல்விகளை சந்தித்துள்ளார், அவரது பயிற்சி பற்றி எனக்கு தெரியாது. ஏனெனில் ஒரு பயிற்சியாளராக அவருடன் நான் வேலை செய்ததில்லை. தற்போதைய இங்கிலாந்து தொடர் அவருக்கு மிகவும் முக்கியமான ஒன்று, அதிகம் சவால் நிறைந்ததும் கூட. தன்னுடைய தவறுகளை திருத்திக் கொண்டு அவர் முன்னேறுவார் என்று எதிர்பார்க்கிறேன். அவருக்கு வாழ்த்துக்கள்” என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading