கோவில்பட்டியில் உள்ள நாடார் மேல்நிலைப்பள்ளியில் 21.6.2025சனிக்கிழமை காலை 10.00மணியளவில் கல்வித்திருவிழா-காமராஜர் பேச்சுப்போட்டிகள் தொடங்கியது. பிற்பகல் 3.00மணியளவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
நாடார் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும் நா.ம.சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவருமான வழக்கறிஞர் ஜெ. ரத்தினராஜ் தலைமைதாங்கினார். உறவின்முறை செயற்குழு உறுப்பினர்கள் திரு.வேல்முருகன், திரு.வெங்கடேஷ், திரு.சாமிராஜா நா.ம.சங்கம்
திரு. நள்ளி கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளித்தலையாசிரியர் திரு. அருணாசலம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

NMSகாமராஜர் பேச்சுப்போட்டி ஒருங்கிணைப்பாளர் திரு. அவனிமாடசாமி அவர்கள்
தொடங்கி வைத்தும் பரிசுகள் வழங்கியும் நமது நாடார் மஹாஜன சங்கத்தின் சார்பில் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் நா.ம.சங்கம் தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் திரு.இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினார். நடுவர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. நூற்றுக்கணக்கான மாணவர்கள் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்றுச்சிறப்பித்தனர்.
அனைவருக்கும் தேனீர் விருந்தும் மதிய உணவு விருந்தும் சிறப்பாக வழங்கப்பட்டது. நிறைவாக உதவித்
தலைமையாசிரியர் திரு. செல்வம் நன்றி கூறினார்.

-செய்தி
ச.சிவக்குமார்,
ஒருங்கிணைப்புக்குழு
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
