தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளுக்கும் கலந்தாய்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி முடிவடைந்தது. 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டு தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
TFC-களில் சான்றிதழ் சரிபார்ப்பு (ஆன்லைன்)
ஜூன் 10 முதல் 20, 2025 வரை நடைபெறும்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
