ராஷ்மிகா மந்தனாவின் ஈரமான மனது
=======================================
இன்று சினிமா உலகில் இளம் மனுசுகளை கொள்ளை கொண்டவராக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ள படம்தான் ‘குபேரா’ இந்தப்படம் தனுஷின் 51வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட ரிலீசுக்கு முந்தைய நிகழ்ச்சி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் கடந்த 15ம் தேதி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அப்படி என்ன பேசினார். அதை கொஞ்சம் இங்கே கேளுங்கள்!
அவர் பேச்சு விபரம்:விமான விபத்துக்கு பிறகு நான் நடுங்கிப் போனேன். இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என புரிந்தது. நமக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன, எதுவரை வாழ்க்கை செல்லும் என தெரியவில்லை.
எனவே, கவனமாக இருங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். மற்றவரிடத்தில் கருணையோடு இருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
அகமதாபாத் விமான விபத்து அவருடைய இதயத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால், இப்படி ஒரு யதார்த்தமான தத்துவத்தை உதிர்த்திருப்பார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். நடிகைக்கு உண்டு ஈரமான மனது என்பதை இவர் பேச்சு உணர்த்தி இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
**
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
