தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் காலையிலேயே மழை கொட்டி வரும் நிலையில், நீலகிரிக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள வானிலை மையம், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி உள்பட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
வானிலை அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று திங்கட்கிழமை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
