ஒரே ஆண்டில் ரூ.5,000 கோடி வருமானம்
தொழில் மூலம் சம்பாதிக்கும் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் 2024ம் ஆண்டின் வருமானம் எவ்வளவு தெரியுமா? 600 மில்லியன் டாலர். இந்திய பண மதிப்பில் இது 5,000 கோடி ரூபாய்க்கு சமம். இதில் பெரும்பாலான வருமானம் கிரிப்டோ முதலீடுகள் மூலமே கிடைத்துள்ளன.
கிரிப்டோ, ரியல் எஸ்டேட் மற்றும் பிற முதலீடுகள் மூலம் இந்த அளவு வருமானம் கிடைத்திருக்கிறது. டிரம்ப் மீம் காயின் எனப்படும் கிரிப்டோ கரன்சி மூலம் மட்டுமே இவருக்கு 320 மில்லியன் டாலர்கள் வருமானமாக கிடைத்துள்ளது. பிற கிரிப்டோ டோக்கன்கள் மூலம் இவருக்கு சுமார் 72 மில்லியன் டாலர்கள் வருமானம் கிடைத்திருக்கிறது. டிரம்ப்புக்கு அமெரிக்காவின் பல இடங்களிலும் சொந்தமாக ரிசார்ட்டுகள், கோல்ப் மைதானங்கள் உள்ளன. அதன் மூலம் அவருக்கு 217 மில்லியன் டாலர்கள் வருமானமாக வந்துள்ளன.
இந்தியாவில் கூட டிரம்ப் டவர் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலமும் இவருக்கு 30 மில்லியன் டாலர்கள் வருமானமாக கிடைத்திருக்கிறது. டிரம்ப் வாட்ச் என்ற கைக்கடிகார பிராண்ட் மூலம் 2.8 மில்லியன் டாலர்களை இவர் சம்பாதித்துள்ளார். மேலும், 211 மில்லியன் டாலர்களுக்கு அவர் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இதன் மூலம் இவருக்கு வட்டி மற்றும் டிவிடெண்ட் மூலம் மட்டும் 12 மில்லியன் டாலர்கள் கிடைத்திருக்கின்றன.

இந்த தகவல் டிரம்ப் வெளியிட்டதுதான். அதாவது, அமெரிக்க அதிபராக பதவியில் இருப்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய வருமானம் எவ்வளவு, அந்த வருமானம் எதன் மூலம் தங்களை வந்து சேர்ந்தது என்பது குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிப்பது கட்டாயமாகும். அதன் அடிப்படையில்தான் டிரம்ப் தன்னுடைய வருமானம் குறித்த விவரங்களை தெரிவித்திருக்கிறார்.
இவரை பலர் உலக ஜோக்கர் என்கிறார்கள். ஆனால், பணம் என்ற காரியத்தில் இவர் கண்ணாக இருப்பதை இந்த வருமானம் காட்டுகிறது. இதை நினைக்கும் போது, ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே – காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே என்று சிவாஜி கணேசன் நடித்த பராசக்தியில் உள்ள ஒரு பாட்டுதான் நமக்கு ஞாபகத்துக்கு வருகிறது
**
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
