ஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரை எப்போதுமே தனது புதிய மாடல்களை செப்டம்பர் மாதம் தான் வெளியிடும். குறைந்த திறன் கொண்ட e மாடல்களை மட்டுமே நடுவே வெளியிடும் வழக்கம் உண்டு. ஆனால், இந்தாண்டு செப்டம்பர் மாதம் ப்ரோ மற்றும் மேக்ஸ் மாடல்கள் மட்டுமே வெளியானது. வழக்கமான ஐபோன் 18 வெளியாகவில்லை.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் வாங்க விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி! ஐபோன் 18 ப்ரோ சீரிஸை தொடர்ந்து, அடுத்ததாக விலை குறைவான மூன்று புதிய மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழக்கமான ஐபோன் 18, ஐபோன் 18இ மற்றும் ஐபோன் ஏர் 2 ஆகியவை 2027ம் ஆண்டின் தொடக்கத்தில், அதாவது பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதத்துக்குள் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தும் சீசனை ஆப்பிள் மாற்றி அமைத்துள்ளது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
