சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜூனா, சோபின் ஷாகிர், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, கிரிஸ் ஞானதரன் ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் எடிட் செய்கிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் தான் ஏற்கனவே கமிட் ஆன இரண்டு படங்களில் இருந்து திடீரென விலகிய நிலையில் , கூலி படத்தில் இருந்தும் அவர் விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் மாதிரியே பல்வேறு திறமைகளைக் கொண்டு சினிமாத்துறையில் கலக்கி வரும் ஸ்ருதிஹாசன், சமீபகாலமாக தான் ஒப்புக் கொள்ளும் படங்களில் திடீரென்று விலகி வருவது சர்ச்சையை ஏற்படுத்தினாலும், கூலி படம் ரஜினி படம் என்பதால் அவர் இந்த மாதிரி முடிவெடிப்பார என்பது கேள்வியை எழுப்பியுள்ளது, அதேசமயம் அவருக்கு சுயமரியாதை அதிகம் என்பதால் யாரேனும் படத்தில் அதிகம் தலையிட்டாலும் ஸ்ருதிஹாசன் விலக நேரிடலாம் என தகவல் வெளியாகிறது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.