கரூர் நொய்யல் கால்வாயில் 40 நாள்களுக்கு நீர் திறக்க தமிழக அரசு அனுமதி

செய்திகள்

கரூர் நொய்யல் கால்வாயில் 40 நாள்களுக்கு நீர் திறக்க தமிழக அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து நொய்யல் கால்வாயிலுள்ள பாசனப் பகுதிகளுக்கு டிசம்பர் 7 முதல் முதல் பிப்ரவரி 4 வரை 40 நாட்களுக்கு நீர் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.