சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை கதைக்கு வரி விலக்கு!

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகனான சம்பாஜியின் வாழ்க்கைக் கதையில் இருந்து உருவாகியுள்ள திரைப்படமான ‘சாவா’ படத்துக்கு அனைத்து மாநிலங்களிலும் வரி விலக்கு வேண்டுமென சிவசேனா கட்சி எம்.பி பிரியங்கா சதுர்வேதி கோரிக்கை வைத்துள்ளார்.

சத்ரபதி சாம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து புதிதாக வெளியிடப்பட்ட இந்தி திரைப்படமான ‘சாவா’வுக்கு மத்தியப் பிரதேசத்தில் வரிவிலக்கு அளிக்கப்படும் என முதல்வர் மோகன் யாதவ் புதன்கிழமை தெரிவித்தார்.  போபாலில் சத்ரபதி சிவாஜி மகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர், மாவீரர்களின் கதைகளை சித்தரிக்கும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று அறிவித்தார்.

இந்து தர்மத்தையும், நாட்டையும் காக்க சம்பாஜி மகாராஜ் தனது உயிரை தியாகம் செய்தார், எனவே, சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்தநாளை முன்னிட்டு, மத்தியப் பிரதேசத்தில் சாவா திரைப்படத்தை வரிவிலக்கு செய்யப் போவதாக அறிவிக்கிறேன்” என்று யாதவ் கூறினார்.  மராட்டியப் பேரரசின் கடுமையான போர்வீரன், அவுரங்கசீப்பின் முகலாய ஆட்சிக்கு எதிராக வீரத்துடன் போரிட்டவர்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading