Headline
புதிய ஆல்டோ கே10 இன் மைலேஜ் 35 கிலோமீட்டர்
சுந்தர்.சி இயக்கத்தில்தான் ரஜினியின் 173-வது படம்! கமல் திட்டம் வெற்றி
இந்தூர் அருகே பேருந்து கவிழ்ந்ததில் மூன்று பேர் பலி! முதல்வர் மோகன் யாதவ் ரூ.2 லட்சம் நிவாரணம்
Kane Williamson retires from T20 cricket
‘பாகுபலி’ ராக்கெட்:  அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை செலுத்தி இஸ்ரோ வரலாறு
இன்று தங்கம், வெள்ளி விலைகள்: நகர வாரியான விலைகளைப் பாருங்கள்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் M. K. Stalin மலர்தூவி மரியாதை
நீதிபதி சூர்யா காந்த் யார்? இந்தியாவின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை நீதிபதி…..
CMS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது – Isro
ஹைதராபாத்-பெங்களூரு தனியார் பேருந்து பைக் மோதியதில் தீப்பிடித்தது, குறைந்தது 15 பயணிகள் இறந்திருக்கலாம்!

“விடாமுயற்சி” படம் பற்றிய – நமது பார்வை

விடாமுயற்சி’ திரைப்படம் இன்று காலை 9.00 மணிக்கு ரிலீஸ் ஆகியது. இப்படம் அஜித் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை கொடுக்க வில்லை ஆனாலும் அஜித் என்ற நடிகருக்காக பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் பற்றிய நமது சிந்தனைக்கு எட்டியதும் ரசித்தது பற்றி பார்க்கலாம்.

கதை

அஜர்பைஜான் நாட்டில் காதல் திருமணம் கொண்ட அர்ஜுன் (அஜித்) – கயல் (த்ரிஷா) தம்பதியின் வாழ்க்கையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு விரிசல் ஏற்படுகிறது. இருவரும் பிரிந்துவிடுவதாக முடிவெடுத்த தனது மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் கொண்டு போய் விடுவதற்காக காரில் அழைத்துச் செல்கிறார் அர்ஜுன். செல்லும் வழியில் ஓரிடத்தில் கார் பிரேக்டவுன் ஆகிறது. அந்த வழியாக வரும் ரக்‌ஷித் (அர்ஜுன்), தீபிகா (ரெஜினா) தம்பதி, அவர்களுக்கு உதவும் வகையில் த்ரிஷாவை அழைத்துச் சென்று பக்கத்தில் இருக்கும் ஒரு கஃபேயில் இறக்கிவிடுவதாக உறுதி அளிக்கின்றனர். கார் சரியானதும் அந்த கஃபேவுக்கு செல்லும் அர்ஜுன், அங்கு தனது மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைகிறார். பல இடங்களில் தேடி அலைகிறார். இந்த தேடுதல் பல உண்மைகள் அவர் முன்னால் வருகிறது. மனைவியை அவரால் கண்டுபிடிக்க முடிந்ததா என்பதே மீது கதை.

இது வழக்கமான அஜித் படம் அல்ல. ஓரிரு இடங்களை தவிர படத்தில் எந்தவித கமர்ஷியல் அம்சங்களும் இல்லை. இதனை முதலிலேயே மனதில் கொள்ளவேண்டியது அவசியம். படத்தின் முதல் காட்சியிலேயே எந்தவித ஆர்ப்பாட்டமோ, அலப்பறையோ, பில்டப்போ இல்லாமல் மிக மிக சாதாரணமாக அறிமுகம் ஆகிறார் அஜித். படம் முழுக்க தன்னுடைய இடத்தை விட பல படிகள் கீழே இறங்கி வந்து நடித்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். எந்த இடத்திலும் கைதட்டல் பெறவேண்டும் என்பதற்காக பில்டப்களை வலிந்து திணிக்காமல் இருந்ததற்கே அவரை மனதார பாராட்டலாம்.

படத்தின் முதல் பாதி முழுவதுமே கிட்டத்தட்ட ஒரு ஹாலிவுட் படம் பார்ப்பது போன்றே உணர்வே இருந்தது. படம் முழுக்க அஜர்பைஜானில் எடுக்கப்பட்டிருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். ஒளிப்பதிவு, இசை, நடிப்பு என எந்த இடத்திலும் மிகைத்தன்மை இல்லாமல் கொண்டு சென்றது சிறப்பு. படத்தின் தொடக்கத்தில் வரும் காதல் காட்சிகள் தவிர இடைவேளை ட்விஸ்ட் வரை படம் விறுவிறுப்பாகவே செல்கிறது. ஆரவ் – அஜித் இடையிலான காட்சிகள், அதன் பிறகு அர்ஜுன், ரெஜினா அறிமுகம், அவர்களின் பின்னணி என அடுத்தடுத்து வரும் காட்சிகள், திரைக்கதையை பில்டப் செய்ய உதவுகின்றன.

இடைவேளையில் வைக்கப்பட்ட ட்விஸ்டை இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே உடைத்து.  கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தும் காட்சிகளால் திரைக்கதை நகராமல் ஒரே இடத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. முதல் பாதியில் இருந்த எங்கேஜிங்கான காட்சிகள் முற்றிலுமாக இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங்.

இதுபோன்ற த்ரில்லர் கதைக்களத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது ஓரிரண்டு புத்திசாலித்தனமான காட்சிகளைத்தான். ஆனால் அதற்காக திரைக்கதையில் பெரிதாக மெனக்கெடாமல் ஒரே நேர்க்கோட்டில் கதையை சொல்லியிருப்பது ஏமாற்றம்.

மூன்று விதமான ‘கிளாஸ்’ ஆன லுக்கில் கவர்கிறார். த்ரிஷா வரும் காட்சிகள் வெகு குறைவு என்பதால் அவருக்கு பெரிதாக வேலை இல்லை. அர்ஜுன் தன்னுடைய பங்கை சிறப்பாக் செய்திருக்கிறார். அஜித்தை வங்கிக்கு அனுப்பி பணத்தை எடுத்து வரச் சொல்லும் காட்சியில் அவரது நடிப்பு சிறப்பு. ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் குறையில்லாத நடிப்பை வழங்கியுள்ளனர்.

படத்தின் ஒளிப்பதிவு பெரும் பலம். புழுதி வீசும் அஜர்பைஜான் நிலப்பரப்பை அட்டகாசமாக காட்சிப்படுத்தியிருக்கிறது ஓம் பிரகாஷின் கேமரா. அனிருத்தின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆக்‌ஷன் காட்சிகள் சில இடங்களில் ரசிக்கும்படி இருந்தாலும் அஜித் – அர்ஜுன் மோதிக் கொள்ளும் இடங்களில் ‘மங்காத்தா’ ரேஞ்சுக்கு எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றமே.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பை இரண்டாம் பாதியிலும் கொண்டு வந்து இழுவையான காட்சிகளை கத்தரி போட்டிருந்தால் ஒரு நேர்த்தியான த்ரில்லர் படமாக வந்திருக்கும். ஸ்டைலிஷ் ஆன மேக்கிங் இருந்தும் கொட்டாவி வரவைக்கும் ‘ஜவ்வான’ இரண்டாம் பாதியால் ‘விடாமுயற்சி’ வீண்முயற்சி ஆகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

இந்த படத்தில் மாஸ் காட்சிகள், பஞ்ச் வசனம் என எந்தவொரு கமர்ஷியல் அம்சமும் இருக்காது


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading