சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021-ல் வெளியான ‘புஷ்பா: 1’ திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகமாக ’புஷ்பா: 2’ திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியானது.
விறுவிறுப்பான திரைக்கதையுடன் வெளியான புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்களிடையே அதிகப்படியான வரவேற்பை பெற்ற நிலையில், பாக்ஸ் ஆஃபிஸில் 1831 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
புஷ்பா 2 திரைப்படம் ஏற்கனவே 3 மணிநேரத்திற்கும் அதிகமான நீளம் கொண்ட திரைப்படமாக இருக்கும் நிலையில், தற்போது மீண்டும் 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்படவிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது 33வது நாளை கடந்துள்ளது. அந்தவகையில் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்திருக்கும் தயாரிப்பு நிறுவனம், புஷ்பா 2 உலகளவில் 1831 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிக வசூல் செய்த திரைப்படமான பாகுபலியின் வசூலை முறியடித்து, இந்திய சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படமாக் புஷ்பா 2 மாறியுள்ளது. பாகுபலி 2 இந்தியாவில் அதிகபட்சமாக ரூ.1416 கோடி வசூலித்திருந்த நிலையில், புஷ்பா 2 ரூ.1438 கோடியை வசூல்செய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தில் கூடுதலாக 20 நிமிடங்கள் சேர்க்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அந்தவகையில் அப்டேட் செய்யப்பட்ட புதிய திரைப்படம் இயக்குநர் சுகுமார் பிறந்தநாளான ஜனவரி 11 முதல், 3 மணிநேர 40 நிமிட வெர்ஷனாக திரையாகவுள்ளது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.