லோக்சபா துணை சபாநாயகர் தேர்வு
காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தல்
லோக்சபா துணை சபாநாயகரை உடனே தேர்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு லோக்சபா காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரின் போது துணை சபாநாயகர் தேர்வை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். துணை சபாநாயகர் பதவி தொடர்ந்து காலியாக நீடிப்பது அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் நெறிமுறைக்கும், மிகவும் நேர்த்தியுடன் கட்டமைக்கப்பட்ட மரபுக்கும் ஏற்புடையதல்ல. நம்முடைய பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் லோக்சபாவில் பல பணிகளை சிறப்பாக செய்து முடிக்க துணை சபாநாயகர் பதவி மிகவும் உதவியாக இருக்கும்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் 2வது ஆட்சி 2019ல் தொடங்கியது முதல் இப்போது வரை துணை சபாநாயகர் பதவி காலியாக உள்ளதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபின்படி துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.