மோடியின் 75வது பிறந்தநாளுக்கு மெஸ்ஸி சிறப்பு பரிசு!
இந்தியா பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 17) தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உலகத் தலைவர்கள், பிரபலங்கள், இந்திய மக்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இதில் ஆச்சரியமாக, அர்ஜென்டினா கால்பந்து லெஜண்ட் லயனல் மெஸ்ஸி பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசை அனுப்பியுள்ளார். அவரது கையொப்பம் பொறிக்கப்பட்ட ஜெர்சி மற்றும் நன்றி குறிப்பு ஒன்றை மோடிக்கு வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“உங்கள் வழிகாட்டுதல், உற்சாகம், உலக அமைதிக்கான பங்களிப்பு ஆகியவை அனைவருக்கும் ஒரு சுடர். நீண்ட ஆயுளும், ஆரோக்கியமான வாழ்வும் உங்களுக்கு கிடைக்க வேண்டும்” என்று மெஸ்ஸி தனது வாழ்த்து குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மோடியின் பிறந்தநாளில் சர்வதேச பிரபலங்களின் வாழ்த்துகள் தொடர்ந்து வருவது, இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
