உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர்.இதில் தென் ஆப்பிரிக்கா வீரர் ரபாடா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ரபாடாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி 212 ரன்களுக்குள் சுருண்டது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து களம் இறங்கிய உஸ்மான் கவஜா மற்றும் மார்னஸ் ஆகியோர் தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். பந்து நன்றாக ஸ்விங் ஆனது. மார்னஸ் லாபஸ்சென் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களம் இறங்கி இருக்கிறார். மறுமுனையில் உஸ்மான் கவஜா 20 பந்துகளை எதிர் கொண்டு 1 ரன் கூட எடுக்க முடியாமல் ஆட்டம் இழந்தார்.

ஆல்ரவுண்டர் கேமரன் கிரீன் ஒரு பவுண்டரி அடித்து மூன்று பந்துகளில் நான்கு ரன்கள் என இரண்டு வீரர்களையும் ஒரே ஓவரில் ரபாடா ஆட்டம் இழக்க வைத்தார். கடுமையாக போராடிய மார்னஸ் 17 ரன்கள் எடுத்திருந்தபோது யான்சன் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து 46 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்தபோது டிராவிஸ் ஹெட் களத்திற்கு வந்தார். ஆனால் அவரும் பெரிய அளவு சோபிக்கவில்லை. 13 பந்துகளை எதிர்கொண்ட அவர் வெறும் 11 ரன்கள் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார். வெப்ஸ்டர் அதிர்ஷ்டம் காரணமாக தொடர்ந்து தப்பித்து வந்தார்.
மறுமுனையில் ஸ்மித் அபாரமாக விளையாடி 112 பந்துகளை எதிர்கொண்டு 66 ரன்கள் எடுத்திருந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏய்டன் மாத்திரம் பந்துவீச்சில் அவர் பெவிலியன் திரும்பினார். 23 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை அலெக்ஸ் கெரி பறிகொடுத்தார்.வெப்ஸ்டர் மட்டும் அதிரடியாக விளையாடி 92 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்தார்.
ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், அடுத்த 20 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்து தடுமாறியது. பின்வரிசை வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 56.4 ஓவரில் 212 ரன்களில் சுருண்டது. அபாரமாக பந்து வீசிய ரபாடா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திருக்கிறார். மார்க்கோ யான்சன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
