கனமழை டூ மிக கனமழை.. கியரை மாற்றும் தென்மேற்கு பருவமழை! 8 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்
அடுத்த சில நாட்கள் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களை ஒட்டிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல, இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை கொடுத்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் கூறியதாவது, “வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று, (ஜூன்.11) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
