சென்னை மீண்டும் வெற்றி பாதைக்கு வருவதற்கு ஆலோசனைகள் பற்றி ஸ்ரீகாந்த் தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “ஓவர்டன் இடத்தில் டேவோன் கான்வே விளையாட வேண்டும். அத்துடன் அன்சுல் கம்போஜை பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வாருங்கள். அஸ்வினை பொறுத்த வரை அவரை அணியிலிருந்து நீக்காதீர்கள். ஆனால் பவர்ஃபிளே ஓவர்களில் பவுலிங் செய்வதை நிறுத்துங்கள்”
“7 – 18 வரையிலான ஓவர்களில் அவர் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராக இருப்பார். ஜடேஜா, நூர் அஹ்மத் எளிதாக 10 ஓவர்களைக் கடத்தி விடுவார்கள். நானாக இருந்தால் ராகுல் திரிபாதியை நீக்கி விட்டு கம்போஜை கொண்டு வந்து ஓவர்டனுக்கு பதிலாக கான்வேயை விளையாட வைப்பேன். அதே போல சிவம் துபேவை முதன்மை அணிக்குள் கொண்டு வருவேன்
ஆண்ட்ரே சித்தார்த்தை இம்பேக்ட் வீரராக பயன்படுத்தலாம். முகேஷ் சௌத்ரியும் நல்ல ஆப்ஷன். கடந்த காலங்களில் அவர் சென்னை அணிக்காக அசத்தியுள்ளார்” என்று கூறினார்.
அவர் கூறுவது போல கம்போஜ், சித்தார்த், முகேஷ் சௌத்திரி போன்ற இளம் வீரர்கள் உள்ளூரில் அசத்தலாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். எனவே தீபக் ஹூடா, திரிபாதி, விஜய் சங்கர் போன்ற காலம் கடந்த வீரர்களை கழற்றி விட்டாலே சென்னை வெற்றிப் பாதைக்கு திரும்பலாம்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.