AI- ஐ அதிகமாக பயன்படுத்தினால் மனிதத் தன்மையை விளையாட்டுத் துறையில் இல்லாமல் போய்விடும்
இது குறித்து டிராவிட் கூறுகையில், பும்ரா தற்போது காயத்தில் இருக்கின்றார்.ஏன் உங்களால் ஏஐ பயன்படுத்தி ஐந்து பும்ராவை உருவாக்க முடியுமா? அப்படி செய்தால் அதில் ஏதேனும் மகிழ்ச்சி இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த டிராவிட், ஐந்து பும்ரா இருந்தால் அணி எப்படி இருக்கும்.அனைவரும் ஒரே மாதிரி செயல்பட்டால் தனித்துவம் என்பது இல்லாமல் போய்விடாதா என்று டிராவிட் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், குறைந்தபட்சம் விளையாட்டு துறையாவது கொஞ்சம் விட்டு வையுங்கள். என்னை பொறுத்தவரை ஏஐ தொழில்நுட்பத்தை விளையாட்டுத்துறையில் சேர்க்கக்கூடாது. விளையாட்டுத்துறையில் ஆவது மனிதத்தன்மை கொஞ்சம் இருக்க வேண்டும். விளையாட்டு துறையாவது தனித்துவத்துடன் இயங்க வேண்டும்.
இதுதான் என்னுடைய கவலையாக இருக்கின்றது. ஏஐ யும் பயன்படுத்தினால் அனைத்தும் சுலபமாகிவிடும். வேண்டுமானால் விளையாட்டுத்துறையில் ஒரு வீரர் ஏன் அடிக்கடி காயம் அடைகிறார் என்பதை பற்றி தெரிந்து கொள்ள ஏஐ யை பயன்படுத்தலாம். மேலும் ஒரு வீரருக்கு எந்த இடத்தில் எப்போது காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை ஏஐ வைத்து கணிக்கலாம்.
ஏனென்றால் தற்போது விளையாட்டுத் துறையில் வீரர்களுக்கு காயம் அடிக்கடி ஏற்படுகிறது. நன்றாக உடல் தகுதியுடன் இருக்கும் வீரர் கூட தற்போது காயத்தில் அவதிப்படுகிறார்.இதனால் ஒரு வேகப்பந்துவீச்சாளர் எப்படி காயம் அடைகிறார். எதனால் காயம் அடைகிறார் என்ற தரவுகள் நம்மிடம் இருக்கும். இதை வைத்துக்கொண்டு நாம் ஏஐயிடம் வழங்கி ஒரு வீரரின் காயத்தை வேண்டுமானால் கணிக்கலாம் என்று டிராவிட் கூறியுள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
