சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கடைசி லீக் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற newzland முதலில் இந்திய அணி பேட்டிங் செய்ய, தொடக்கத்தில் சுப்மன்கில், ரோகித் சர்மா, விராட் கோலி விக்கெட்டுகளை இழந்தாலும் அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஷர் படேல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரது பேட்டிங்கால் இந்திய அணி 249 ரன்களை குவித்தது.
250 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ரவீந்திரா 6 ரன்னில் அவுட்டாக, வில் யங் நிதானமாக ஆடினார். அவர் வில்லியம்சனுடன் இணைந்து நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடினார். ஆனால், அவர் 35 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 22 ரன்னில் வருண் சக்கரவர்த்தி பந்தில் போல்டானார்.
வில்லியம்சன் தனி ஆளாக போராடினார். ஆனால், அவருக்கு மறுமுனையில் யாரும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அவருடன் சிறிது நேரம் ஒத்துழைப்பு தந்த டேரில் மிட்செல் 17 ரன்னில் குல்தீப் சுழலில் அவுட்டாக, அடுத்து விக்கெட் கீப்பர் டாம் லாதம் வந்தார்.
கேப்டன் ரோகித் சர்மா வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜடேஜாவை மாறி, மாறி வீச வைத்தார். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்தது. டாம் லாதம் ஜடேஜா சுழலில் 14 ரன்னில் அவுட்டானார். கடந்த போட்டிகளில் பேட்டிங்கில் மிரட்டிய கிளென் ப்லிப்ஸ் வந்ததும் சிக்ஸர் அடித்து மிரட்ட, அவருக்கு வருண் சக்கரவர்த்தி வில்லனாக மாறினார். வருண் சுழலில் ப்லிப்ஸ் 12 ரன்னில் அவுட்டானார்.
இந்திய அணிக்காக நடப்பு தொடரில் முதன்முறையாக அறிமுகமான தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி 10 ஓவர்களில் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் குரூப் பி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
