மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழக வேலை!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகம் 1976-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.

70 பேராசிரியர்கள், 140 அலுவலக ஊழியர்கள், 4,000 மாணவர்கள் எனப் பிரமாண்டமாக மலை அடிவாரத்தில் உள்ளது. தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், நேரடி கல்வி நிறுவனமாக செயல்படும் இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்தியா முழுவதிலுமிருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த பல்கலைக் கழகத்தில் ஹோம் சயின்ஸ் துறையில் காலியாக உள்ள கவுரவ விரிவுரையாளர்/பகுதி நேர ஆசிரியர்கள் காலிப் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணியின் பெயர் : Guest/Part-Time Teacher – Form equipments operation and maintenance

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.02.2025 Time: 11.00 P.M.

தேர்வு செய்யப்படும் முறை : நேரடி நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 25.02.2025ல் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் M.E / Mtech agriculture engineering / pht or iCar- net or BE agricultural engineering படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் பெற்று இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்கள் 50% மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். எம்.பில், பிஎச்டி, செட் ,நெட், ஸ்லெட், ஜேஆர்எஸ், ஜேஎஸ்ஆர்பி – நெட் கூடுதல் தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும். கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி அனுபவம் கூடுதல் தகுதியாக கருத்தில் கொள்ளப்படும்.

ஊதிய விபரம்: பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு விதிகளின் படி ஊதியம் வழங்கப்படும்.

முகவரி : indra gandhi block, The Gandhigram Rural Institute, Gandhigram – 624302, Dindigul, Tamil Nadu.

விண்ணப்பத்தை டவுன்லோடு செய்ய :- https://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/20250219_2.pdf

விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான அசல் சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வுக்கு வரும்போது நேரில் கொண்டு வர வேண்டும்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading