மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்திலிருந்து இதுவரை வெளிவந்த இரண்டு பாடல்களும் சூப்பர்ஹிட். இப்படத்தின் ட்ரைலர் படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே டபுள் மடங்காக அதிகரித்துள்ளது. இப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இப்படம் பிப். 6 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் விடாமுயற்சியை 800 திரைகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.