மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் மகிழ் திருமேனி பல சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகின்றார். அப்போது அவர், அஜித் குறித்து கூறிய பல சுவாரஸ்மான விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியுள்ளது.
அதாவது,, “ படத்தில் கமிட் ஆன போது அஜித் சார், ஒன்று கூறினார். பலரும் பலவிதமாக பேசுவார்கள் அதையெல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் என்றார். என்னைப்பற்றியும் படம் குறித்தும் பல தகவல்கள், அதுவும் தவறான தகவல்கள் வந்தபோது, நான் அஜித் சார் சொன்னதைத்தான் நினைத்துக் கொண்டேன்.
படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதில் சில பிரச்னைகள் இருக்கின்றது எனத் தெரிந்த பின்னர், எனக்கு லைகாவில் இருந்து போன் செய்து கூறினார்கள். அதன் பின்னர் அஜித்சார் போன் செய்து, நம்ம படம் பண்டிகைக்கு வரலனா என்ன? நம்ம படம் வந்தாலே பண்டிகைதான். கவலைப்படாம வேலை பாருங்க மகிழ் எனக் கூறினார்.

மேலும், என்னை நம்பி பணம் போட்டுள்ளார்கள். எனக்கு ரேஸில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம். நான் ரேஸ்க்கு போவதற்கு முன்னர் அந்த இரண்டு படங்களின் வேலைகளையும் முழுவதுமாக முடித்துக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால், என்னால் ரேஸில் 100 சதவீதம் ஆக்ஸிலேட்டரை அழுத்த முடியாது. அதனால் என்னால் ரேஸிற்கு உண்மையாக இருக்க முடியாது எனக் கூறினார். அவரது இந்த வார்த்தைகளை நான் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.