இந்திய ராணுவத்தில், காலியாக உள்ள பொறியியல் பட்டதாரிகளுக்கான இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
திருமணமாகாத ஆண் மற்றும் பெண் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று குறுகியகால சேவை ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய ராணுவத்தில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பதவிகளுக்கான நியமனங்களை மேற்கொள்ளும் ஆணையமாக இருப்பது குறுகியகால சேவை ஆணையம். இந்த ஆணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் இராணுவ அதிகாரிகளின் குறைந்தபட்ச பணிக்காலம் பத்து ஆண்டுகள் ஆகும்.
இந்தப் பணிக்கு தகுதியுடைவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 5ஆம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியாகவிருக்கும் 381 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதில், ஆண்களுக்கு, பொறியியலில் சிவில், கணினி அறிவியல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், இதர பிரிவினர் மற்றும் பெண்கள் பிரிவில் சிவில், கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் உள்ளிட்டப் பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் இந்தப் பதவியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 20 – 27க்குள் இருக்க வேண்டும். பொறியியல் பட்டம் பெற்றவர்கள் அல்லது இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிக்கு ரூ.56,100 முதல் ரூ.2,50,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படுவோர், பல்வேறு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற அமர்த்தப்படுவார்கள். பிறகு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு இறுதித் தேர்வு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.