அமெரிக்கா–கிரீன்லாந்து விவகாரம்: டிரம்ப் அதிரடி
அமெரிக்காவின் 47வது அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை வாங்கும் திட்டத்துக்கு எதிரான நாடுகளுக்கு அதிக வரி விதிப்பதாக எச்சரித்துள்ளார்.
டென்மார்க் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து, மூலோபாயச் சிறப்பிடம் மற்றும் வளங்கள் காரணமாக டிரம்பின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இறக்குமதி பொருட்களுக்கு 10–20% பொது வரி மற்றும் சீனாவுக்கு 60% வரி என ஏற்கனவே அறிவித்த டிரம்ப், இந்த வரிப் பிரகடனத்தை வெளியுறவுக் கொள்கை அழுத்த கருவியாகப் பயன்படுத்த முயலுகிறார்.
அத்துடன், கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்று டென்மார்க் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இச்செயல் உலக வர்த்தக சந்தையில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
