என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது



என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு எப்போது?

*என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.*

என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு பொறுத்தவரையில் ஆன்லைன் மூலம் நடக்கிறது. இன்று  ஜூலை 7-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி வரை நடைபெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

முதலில், அரசு பள்ளியில் படித்த சிறப்பு ஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7 மற்றும் 8-ந் தேதிகளிலும், பொதுப்பிரிவில் சிறப்பு ஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரையிலும் கலந்தாய்வு நடக்கிறது.


அதன்பிறகு, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு ஜூலை 14-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி வரையில் 3 சுற்றுகளாக நடைபெறுகிறது. துணை கலந்தாய்வு ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும், எஸ்.சி. வகுப்பினருக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 25, 26-ந்தேதிகள் வரையிலும் நடைபெற உள்ளது.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading