உலகின் பல நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிகளை விதிப்பதாகக் கூறி வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பதிலுக்கு அந்த நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கும் என அறிவித்தார். 30%, 40% என கூடுதல் வரி விகிதத்தை அவர் அறிவித்ததை அடுத்து பல நாடுகள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தன. இதனால், அடிப்படை கூடுதல் வரி விகிதமாக 10%-ஐ அறிவித்த டொனால்டு ட்ரம்ப், 90 நாட்களில் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார். பல நாடுகள் அமெரிக்காவுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், பிரிட்டன் மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளுடன் மட்டுமே ஒப்பந்தம் இறுதியானது.
இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த டொனால்டு ட்ரம்ப், “ஆகஸ்ட் 1-ம் தேதிதான் புதிய வரி விதிப்புக்கான காலக்கெடு. ஆனால், அது 100% உறுதியானது அல்ல. தற்போது பட்டியலில் வெளியாகி உள்ள நாடுகளுக்கான இறக்குமதி வரி விகிதம் இறுதியானதுதான் என்றாலும், அது 100% இறுதியானது அல்ல. அந்த நாடுகள் புதிய திட்டங்களுடன் எங்களை அணுகினால், அந்தத் திட்டம் எங்களுக்கு விருப்பமானதாக இருந்தால் நாங்கள் அதை ஏற்போம். நாங்கள் கூடுதல் வரி விகிதத்தை அறிவித்திருப்பதால், எங்களுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையில் நாடுகள் ஈடுபடுமானால் எங்கள் வரி விகிதம் இன்னும் அதிகரிக்கப்படும்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
