மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மிக கனமழை பெய்யும்

கோவை, தென்காசி, குமரி, தஞ்சை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு குமரி, நெல்லையின் மாஞ்சோலை உள்பட பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய இருப்பதாகவும், இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

நீலகிரி, வால்பாறை ஆகிய இடங்களுக்கு இன்று[14.06.2025] முதல் அடுத்த 4 நாட்களுக்கு மிகப்பெரிய கனமழைக்கு வாய்ப்பு இருக்கும். அதி தீவிர கனமழை இருக்கும். கன்னியாகுமரி, மாஞ்சோலை பகுதிகளில் கனமழை இருக்கும். கேரளா, காவிரி நீர்பிடிப்பு பகுதிகள், கடலோர கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மிக கனமழை பெய்யும்.

பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பொழியும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி, பார்சன்ஸ் பள்ளத்தாக்கு மற்றும் முகூர்த்தி அணை பகுதிகளை பொறுத்தவரை 24 மணி நேரத்தில் இரட்டை மற்றும் மூன்று சதங்கள் எளிதாக அடிக்கும். இதனால், கவனமாக இருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading