தென்னாப்பிரிக்கா கடைசி இன்னிங்சில் ஏய்டன் மாத்க்கரம் 136 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். மேலும் பந்துவீச்சு இரண்டு இன்னிங்ஸில் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதன் மூலம் ஏய்டன் மாத்க்கரம் ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றினார்.
இது குறித்து அவர் கூறியதாவது , என் வாழ்நாளில் இதைவிட நான் மிக முக்கியமான சிறந்த ரன்களை அடித்தது கிடையாது. முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனா பிறகு எப்படி அனைத்தும் மாறியது என்பது நினைக்கும்போதே ஒரு வித்தியாசமாக இருக்கிறது. கொஞ்சம் அதிர்ஷ்டமும் களத்தில் கை கொடுத்தது.
நான் களத்தில் கொஞ்சம் நேரத்தை செலவிட்டேன். இதனால் எனக்கு ரன்கள் கிடைத்தது. எனக்கு சாதகமாக சில விஷயங்கள் நடந்தது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் லண்டன் லார்டா மைதானத்தில் டெஸ்ட் போட்டி விளையாட வேண்டும் என்பது ஒரு ஆசையாக இருக்கும். ஆனால் இதே மைதானத்தில் இறுதிப் போட்டியில் விளையாடியது மிகவும் ஸ்பெஷல் ஆனது.
மேலும் பல தென்னாப்பிரிக்க ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தார்கள். இதன் மூலம் இது எங்களது சொந்த ஊர் போல் எங்களுக்கு தோன்றியது. எங்கள் வாழ்நாளில் மிகவும் சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று. டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் செய்வது என்பது ஒரு போன்றது ஆகும்.
நெருக்கடியை சமாளித்து விளையாட வேண்டும். ஆடுகளத்தை பார்க்கும் போதும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு திறனை பார்க்கும் போதும் பல சவால்களை சந்தித்து தான் விளையாடினோம். பல பந்துகளை நாங்கள் எதிர்கொண்டு அதன் பிறகு தான் விளையாடினோம். ரன்கள் எடுக்க நான் பல முயற்சிகளை செய்து, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடிக்க வேண்டிய பந்துகளை அடித்து ரன்களை சேர்த்தோம்.
சுழற்பந்துவீச்சாளர் லயன் மிகச்சிறந்த பந்துவீச்சாளர். நாங்கள் விளையாடும் போது எங்களுக்குள் பல வாக்குவாதம் எழுந்தது. இந்த ஆட்டம் ஐந்தாவது நாள் சென்றிருந்தால் நிச்சயம் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்திருக்கும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் தெம்பா பவுமா தான்,எங்களை வழி நடத்தினார்.
அவர்தான் நான் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது எனக்கு உறுதுணையாக இருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக எங்கள் அணியை சிறப்பாக வழிநடத்திருக்கின்றார். நேற்று பேட்டிங் செய்த போது அவர் காயத்தையும் மீறி தொடர்ந்து விளையாடினார். அணிக்கான முக்கியமான ரன்களை அவர் அடித்தார். இந்த இன்னிங்ஸ் நாங்கள் விளையாடுவது மூலம் இதனை பல ஆண்டுக்கு மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று நம்புகிறோம் என ஏய்டம் மார்க்கரம் தெரிவித்துள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
