ரஃபேல் விமானங்கள் வீழ்த்தப்பட்டதா?

ஆபரேஷன் சிந்தூர்: ரஃபேல் போர் விமானங்களின் பங்கு
கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த கூட்டு இராணுவ நடவடிக்கையில், இந்திய விமானப்படையின் அதிநவீன ரஃபேல் போர் விமானங்கள் முக்கிய பங்காற்றின.

ரஃபேல் விமானங்களில் இருந்து SCALP க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் போன்ற அதிநவீன ஆயுதங்கள் துல்லியமான தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஃபேல் விமானங்கள் வீழ்த்தப்பட்டதா?
ஆபரேஷன் சிந்தூருக்குப் பின்னர், பாகிஸ்தான் ராணுவம் 3 ரஃபேல் போர் விமானங்களையும், 2 ஜெட் ரக விமானங்களையும் சுட்டு வீழ்த்தியதாக அந்நாடு உரிமை கோரியுள்ளது.

இதுகுறித்து இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் பார்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் “சண்டையில் இழப்புகள் சகஜம்” என்று பதிலளித்தது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது.

ரஃபேல் போர் விமானங்கள் பாகிஸ்தானால் வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் தகவல், அந்த விமானங்களைத் தயாரிக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இதற்கு முன், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு அடுத்த நாளான மே 8ஆம் திகதி, ஐரோப்பிய பங்குச்சந்தையில் டசால்ட் நிறுவனத்தின் பங்குகள் 1.75 சதவீதம் வரை உயர்ந்திருந்தது நம்பிக்கையளிப்பதாக இருந்தது.

இருப்பினும், பாகிஸ்தான் ராணுவம் ரஃபேல் விமானங்களை வீழ்த்தியதாக செய்தி பரவியதைத் தொடர்ந்து, கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் பங்குகள் 10 சதவீதத்திற்கும் அதிகமான சரிவைச் சந்தித்தன.

குறிப்பாக, மே 12ஆம் திகதி திங்களன்று, இந்த நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 7 சதவீதம் சரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading