இது ஃபேஸ் ஐடி உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது ஐபோன் எஸ்இ சீரீஸில் காணப்படும் பாரம்பரிய ம்யூட் சுவிட்சுக்கு பதிலாக ஒரு ஆக்ஷன் பட்டனையும் கொண்டுள்ளது. கேமராவை ஸ்டார்ட் செய்வது அல்லது டிஎன்டி மோட்-ஐ ஆன் செய்வது போன்ற பல்வேறு செயல்பாடுகளை விரைவாக அணுக, இந்த ஆக்ஷன் பட்டன் உதவும்.கூடுதலாக, ஆப்பிள் ஐபோன் 16இ ஆனது யூஎஸ்பி-சி போர்ட்டுடன் வருகிறது. இது விரைவான டேட்டா பரிமாற்றம் மற்றும் சார்ஜிங்கிற்காக லைட்னிங் போர்ட்டை மாற்றுகிறது. இது ஆsப்பிளின் ஏ18 சிப் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் ஐபோன் 16இ மாடலில் 4-கோர் ஜிபியு மற்றும் 16-கோர் நியூரல் எஞ்சின் ஆகியவை மெஷின் லேர்னிங் பணிகளை மிகவும் திறமையாக கையாளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை இது சிங்கிள் 48எம்பி ஃப்யூஷன் ரியர் கேமராவுடன் வருகிறது, இது விரிவான ஹை ரெசல்யூஷன் புகைப்படங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. இதன் கேமரா செட்டப் ஆனது 2எக்ஸ் டெலிஃபோட்டோ ஜூம் விருப்பத்தை வழங்குகிறது. இயல்பாக ஐபோன் 16இ ஆனது 24எம்பி புகைப்படங்களை தான் எடுக்கும், ஆனால் அதிக தெளிவுத்திறன் கொண்ட காட்சிகளுக்கு 48எம்பி மோட்-க்கு மாறலாம்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.