சாம்பியன் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இந்தியாவை எதிர்கொண்டு விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வெறும் 241 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனை அடுத்து பாகிஸ்தான் அணி பந்து வீச தொடங்குவதற்கு முன்பு பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் தஸ்பி எனப்படும் இறைவனின் பெயரை கூறி பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தார்.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அப்போது இது குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் ரசிகர்கள், சிலர் இறைவனின் உதவியை பாகிஸ்தான் வீரர்கள் நாடினாலும் தங்களது பணியை முதலில் சரியாக செய்ய வேண்டும் என்று சாடி இருக்கிறார்கள்.பந்து வீச்சிலும், பில்டிங்கிலும் சொதப்பிவிட்டு அதன் பின் இறைவனின் உதவியை நாடி என்ன பயன் என்று குற்றம் சாட்டு இருக்கிறார்கள்.
அதே சமயம் இந்தியாவை பாராட்டியுள்ள பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு பணியை சரியாக செய்ததாகவும் பாகிஸ்தானை வீழ்த்துவதற்கான திட்டம் அவர்களிடம் இருந்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் 1990களில் கிரிக்கெட் விளையாடுவது போல் இன்னுமே விளையாடுவதாகவும், பாகிஸ்தான் அணி தங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் நேபாள், ஜிம்பாப்வே அணிகள் போல் ஆகிவிடுவார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
