சீனா ஆக்கிரமிப்பு தெளிவான பதில் தேவை – மத்திய அரசுக்கு சோனியா மீண்டும் கோரிக்கை
கல்வான் தாக்குதல் சம்பவம் நடந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. எனினும், சீன ஆக்கிரமிப்பு பற்றி மத்திய அரசு இன்னும் தெளிவான விளக்கம் எதையும் தரவில்லை என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, சோனியா விடுத்துள்ள அறிக்கை:எல்லையில் சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து இதுவரை தெளிவான தகவல் வரவில்லை. இந்த விவகாரத்தில் தெளிவான பதிலை மத்திய அரசு தரும் என கடந்த ஓராண்டாக காங்கிரஸ் பொறுமையுடன் காத்திருந்தது. எத்தகைய சந்தர்ப்ப…
