ஒரு நல்ல வேலை பெறுவதற்கும் ஒரு சிறந்த தொழிலை உருவாக்குவதற்கும் கல்லூரி பட்டப்படிப்பு முக்கியமா என்ற விவாதம் உலகம் முழுவதுமே எழ தொடங்கி இருக்கிறது. தற்போது ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வேகமான வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஏஐ மூலம் பெரும்பாலான வேலைகள் எளிதாக செய்ய முடியும் என்பதால் எதற்காக கல்லூரி படிப்பு என்பது தான் முக்கியமான விவாதமாக உள்ளது.
தென்காசியில் நான் 19 வயதுடைய தொழில்நுட்பக் குழுவினுருடன் நெருக்கமாக பணியாற்றுவேன், அவர்களின் ஆற்றலும் திறமையும் அளப்பரியது . அவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்றால் நானே கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது என ஸ்ரீதர் வேம்பு பதிவு செய்திருக்கிறார். அதாவது கல்லூரி பட்டப்படிப்பில் நேரத்தை வீணாக்காமல் நேரடி தொழில் பயிற்சி பெறுங்கள் என தெரிவித்துள்ளார். ஜோஹோ இதற்காகவே மாணவர்களுகு தனி பயிற்சி நிறுவனத்தையே செயல்படுத்துகிறது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
