தமிழ்நாடு வேளாண் பல்கலை சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழக வேளாண் பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலையில் (வேளாண் பிரிவு) இளங்கலை படிப்பு(UG) மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்த கல்வியாண்டில் தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும், மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும்(வேளாண்மைப் பிரிவு)  ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 14 இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு  மற்றும் வேளாண்மைப் பிரிவு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திக்கு http://tnau.ucanapply.com என்ற இணையத்தில் விண்ணப்பங்கள் கடந்த மே 9ம் தேதி முதல் பெறப்பட்டு வந்தன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி நாளாக ஜூன் 16ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் 37,007 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 29,349 பேர் தரவரிசைக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 18,443 மாணவிகளும், 9,370 மாணவர்களும் அடங்குவர். பொது இடஒதுக்கீட்டிற்கான (Academic Stream) தரவரிசை பட்டியலில் 27,823 விண்ணப்பதார்களும் மற்றும் தொழில்முறைக் கல்வி இடஒதுக்கீட்டில் (Vocational Stream) 1266 விண்ணப்பதாரர்கள் இடம் பெற்று உள்ளனர்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading