இன்றைய வானிலை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதியும், குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியும் உருவாகி இருக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிக தீவிரமாக இருந்தது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அநேக இடங்களிலும், இதர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading