ஆப்பிள் நிறுவனம்-  ஐபோன் 17இ (iPhone 17e) மாடலை உருவாக்கி வருகிறது!

ஆப்பிள் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஐபோன் ஆக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 16இ (iPhone 16e) மாடல் ஆனது உண்மையில் கஸ்டமர்களால் ஏற்றுக்கொள்ளபட்டதா என்பது குறித்த எந்த துல்லியமான விவரங்களும் (அதாவது ஐபோன் 16இ விற்பனை தொடர்பான சரியான புள்ளி விவரங்கள்) வெளியாகவில்லை

Iphone 16e

ஐபோன் 16இ அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இது ஐபோன் எஸ்இ 2022 (iPhone SE 2022) மாடலை விட அதிகமாக விற்பனையாகி உள்ளதாக கூறுகின்றன. இதற்கிடையில் தான் “ஐபோன் 16இ வெற்றி அடைந்து விட்டது தான்” என்பதை குறிக்கும் வகையிலான ஒரு தகவல் கிடைத்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 16இ மாடலின் தொடர்ச்சியான ஐபோன் 17இ (iPhone 17e) மாடலை ஏற்கனவே உருவாக்கி வருவதாகவும், இது கூடிய விரைவில் ட்ரையல் ப்ரொடெக்ஷனுக்குள் (Trial Production) நுழையும் என்றும், இது 2026 இல் அறிமுகமாகும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

ஃபிக்ஸட் ஃபோகஸ் டிஜிட்டல் (Fixed Focus Digital) என்கிற சீன டிப்ஸ்டரின் பதிவின்படி, ஆப்பிள் அதன் புதிய இ சீரிஸ் மாடலுக்கான வருடாந்திர வெளியீட்டு அட்டவணையை கொண்டிருக்கும்.. அதாவது இனி ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் அதன் இ சீரீஸ் மாடல்களை அறிமுகம் செய்யும் என்று அர்த்தம். மேலும் ஐபோன் 17இ மாடலுக்கான சோதனை தயாரிப்பு தற்போது ஆப்பிளின் அஜெண்டாவில் இருப்பதாக இந்த பதிவு கூறுகிறது.

ஐபோன் 16இ ப்ரொடெக்ஷன் லைன்ஸ்களின் மறுவடிவமைப்பு ஏற்கனவே நடந்து வருவதாகவும் இந்த டிப்ஸ்டர் கூறியுள்ளார். இதற்கிடையில், ஐபோன் 17இ அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும், இது எஸ்இ பிராண்டிங் இல்லாத ஆப்பிளின் இரண்டாவது என்ட்ரி லெவல் ஐபோன் மாடலாக இருக்கும் என்றும் அந்த பதிவு வெளிப்படுத்துகிறது. நினைவூட்டும் வண்ணம் ஆப்பிளின் ஐபோன் 16இ தற்போது இந்தியாவில் ரூ.59,900 க்கு வாங்க கிடைக்கிறது.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading