தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் கொண்டலூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மதுரையில் இருந்து விமான மூலம் சென்னைக்கு செல்கின்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் துபாயில் பணிபுரியும் தனது நண்பர்கள், உறவினர்கள் ,மற்றும் சமூக சேவகர்களின் உதவியுடன் 5 ஆம் வகுப்பில் பயிலும் 20 மாணவ மாணவிகளை மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்ல பயணம் ஏற்பாடு செய்துள்ளார்.
தென்காசியில் இருந்து புறப்பட்டு 18.01.2025 அன்று காலை 7 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்த மாணவர்கள் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தங்களது இன்பமான பயணம் குறித்து பகிர்ந்து கொண்டனர்.
பள்ளித் தலைமையாசிரியர் மைக்கேல் ராஜ் குறிப்பிடுகையில்,
மாணவர்கள் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டனர்.அதனைத் தொடர்ந்து துபாயில் உள்ள எனது நண்பர்கள் மற்றும் சமூக சேவகர்கள்,மாவட்ட கல்வி அதிகாரிகள் துணையுடன் இந்த விமான பயணத்தை ஏற்பாடு செய்தோம். உதவிய அனைவருக்கும் நன்றி.
மாணவர்களின் கனவு நனவானதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.இன்று அறிவியல் தொடர்பாக பிரில்லா கேளரங்கம் 3d மையம், மெரினா பீச்சில் தலைவர்களின் சமாதிகள்,தலைமைச் செயலகம் வள்ளுவர் கோட்டம்,வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களை மாணவர்களை அழைத்துச் சென்று காண்பிக்கவும் பின்பு இரவு ரயில் மூலம் புறப்பட்டு தென்காசி செல்கிறோம் எனக் குறிப்பிட்டார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.