தில் ராஜு தயாரிப்பில் ஷங்கர் தயாரிப்பில் வெளியான படம் ‘கேம் சேஞ்சர்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்விப் படமாக இது அமைந்தது. மேலும், முதல் நாள் வசூல் ரூ.186 கோடி என்று படக்குழு வெளியிட்ட போஸ்டரும் இணையத்தில் கடுமையாக கிண்டல் செய்யப்பட்டது. தெலுங்கு திரையுலகின் சமீபத்திய படங்களில் பெரும் நஷ்டத்தைக் கொடுத்த படம் என்ற பெயரை ‘கேம் சேஞ்சர்’ எடுத்துள்ளது.
இப்படத்தின் இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் எதுவுமே இன்னும் முடிவாகவில்லை.
கேம் சேஞ்ச்ir நஷ்டத்தை ஈடுசெய்ய மீண்டும் தில் ராஜு தயாரிப்பில் மீண்டும் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் ராம் சரண். அப்படத்துக்கு வழக்கமான சம்பளத்தை விட மிகக் குறைவாக பெற்றுக்கொள்ள முடிவு செய்திருக்கிறார். இது நல்ல விஷயம் என்று தெலுங்கு விநியோகஸ்தர்கள் பலரும் ராம் சரணுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.