Tue. Oct 8th, 2024

காஷ்மீரில் திருப்பதி ஏழுமலையான் கோயில்
கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

By admin Jun15,2021 ##kashmir

காஷ்மீரில் திருப்பதி ஏழுமலையான் கோயில்
கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

காஷ்மீரில் புதிதாக திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, மஜீன் என்ற கிராமத்தில் இந்த கோயிலை கட்டுவதற்காக, 62.06 ஏக்கர் நிலத்தை 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு காஷ்மீர் அரசு வழங்கி இருக்கிறது. இந்த இடத்தில்தான், பிரம்மாண்டமான ஏழுமலையான் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை 13.6.2021 அன்று நடந்தது. இந்த விழாவில் ஜம்மு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்கா பேசியதாவது: இது ஜம்மு-காஷ்மீருக்கு பெருமைக்குரிய தினமாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க தினமாகவும் அமைந்துள்ளது. இந்த அற்புதமான தெய்வீக ஆலயப் பணிகள் நிறைவடையும் போது, விசுவாசத்தின் மையமாகவும், ஆன்மீகத்தின் இலக்காகவும் இருக்கும். ஆந்திராவைப் போலவே இங்கும் மருத்துவமனை வசதிகளையும் தேவஸ்தானம் அமைக்கவுள்ளது. இந்திய கலாச்சாரத்தின் அடித்தளத்தை வலிமைப்படுத்த வேத பாடசாலைகள் அமைக்கப்படுவது மிகவும் மகிழ்ச்சி. கோயில் இங்கு அமைக்கப்படுவதால் பல துறைகளில் வேலைவாய்ப்புகள் பெருகும். அது நிச்சயம் இந்த மண்டலத்தின் பொருளாதார நிலையை மாற்றும். இவ்வாறு அவர் பேசினார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading