admin

மத்திய அமைச்சரவை விரிவாக்கம்
மோடி, அமித்ஷா தீவிர ஆலோசனை

மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதற்காக கடந்த வியாழக்கிழமை முதல் மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகிறார். இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ தலைவர் ஜேபி நட்டாவுடனும் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உட்பட பல மாநிலங்களை சேர்ந்த 25 எம்பிக்கள் மற்றும் அமைச்சர்களுடன்  அமித்ஷா அவருடைய வீட்டில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலோசனை நடத்தினார்.இந் நிலையில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், …

Read More

காங்கிரஸ், பகுஜன்சமாஜ் கட்சிகளுடன்
கூட்டணி இல்லை: அகிலேஷ் திட்டவட்டம்

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்க உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சிக்கு எதிர்ப்பு நிலவுகிறது. இதனால், உ.பி. அமைச்சரவையை மாற்றி அமைத்து மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜ வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில், இந்தி டிவி சேனல் ஒன்றுக்கு சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் அளித்த சிறப்பு பேட்டி: யோகி ஆதித்யா அரசை உ.பி. மக்கள் வெறுக்கின்றனர்….

Read More

சீனா ஆக்கிரமிப்பு தெளிவான பதில் தேவை – மத்திய அரசுக்கு சோனியா மீண்டும் கோரிக்கை

கல்வான் தாக்குதல் சம்பவம் நடந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. எனினும், சீன ஆக்கிரமிப்பு பற்றி மத்திய அரசு இன்னும் தெளிவான விளக்கம் எதையும் தரவில்லை என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, சோனியா விடுத்துள்ள அறிக்கை:எல்லையில் சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து இதுவரை தெளிவான தகவல் வரவில்லை.  இந்த விவகாரத்தில் தெளிவான பதிலை மத்திய அரசு தரும் என கடந்த ஓராண்டாக காங்கிரஸ் பொறுமையுடன் காத்திருந்தது. எத்தகைய சந்தர்ப்ப…

Read More

மோடி நல்ல மனநிலையில் இல்லை

டிரம்ப் கருத்துக்கு இந்தியா மறுப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது, இந்தியா-சீனா இடையே நிலவும் மோதல் பற்றி அவர் கருத்து தெரிவித்தார். இதுகுறித்து, டிரம்ப் கூறியதாவது: இந்திய பிரதமர் மோடியுடன் நான் பேசினேன். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான மிகப்பெரிய மோதலில் மோடி நல்ல மனநிலையில் இல்லை. இந்த நாட்டில் மீடியாக்கள் என்னை விரும்புவதை விட இந்தியாவில் அவர்கள் என்னை அதிகமாக விரும்புவார்கள் என நான் நினைக்கிறேன். மோடியை நான்…

Read More

சீன எல்லையில் என்ன நடக்குது
நாட்டுக்கு உண்மை சொல்லுங்க
ராகுல் காந்தி கேள்வி

எல்லையில் இந்தியா-சீனா இடையே நடக்கும் மோதல் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முதன்முறையாக கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து, ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டரில் கூறியிருப்பதாவது: லடாக் மற்றும் சிக்கிம் பகுதியில் அமைந்திருக்கும் சீன எல்லையில் நிலவும் நிலவரம் குறித்த குழப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுகுறித்து, அரசு தெளிவுபடுத்த வேண்டும். எல்லையில் சீனாவுடன் நிலவும் நிலவரத்தில் அரசு தொடர்ந்து மவுனம் சாதிப்பது மிகப்பெரிய யூகத்துக்கே வழி வகுக்கும். மிகவும் நெருக்கடியான நேரத்தில் நிச்சயமற்ற…

Read More

கோல்கத்தாவில் முக்கிய தீவிரவாதி கைது

ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ் (ஜேஎம்பி) என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த முக்கிய தீவிரவாதி அப்துல் கரீம் என்ற போரோ கரீமை கோல்கத்தா சிறப்பு அதிரடிப்படை போலீசார் நேற்று காலை கைது செய்தனர். முர்ஷிதாபாத் மாவட்டம் லங்கிபுர் பகுதியில் சுதி பிஎஸ் என்ற இடத்தில் மடக்கிப்பிடித்தனர். ஜேம்பி தலைவர் சலாகுதீன் சலேஹின் உட்பட பல தீவிரவாத தலைவர்களுக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுத்தவன் அப்துல் கரீம். 2014ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக…

Read More

ஐபிஎல்”லை மறந்து விடுங்கள்!!!!!

“பி.சி.சி.ஐ.  அதிகாரிகளுடன்  கலந்துரையாடிய பின்னர்தான் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா??  இல்லையா?? என்பதை உறுதியாகக் கூற முடியும்” என்று  பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தெரிவித்தார். கங்குலி மேலும்  கூறுகையில், “ இப்போது நிகழ்ந்து வரும் மாற்றத்தை நாங்கள்  கண்காணித்து வருகிறோம். இப்போதைய சூழ்நிலையில் எங்களால் எதுவும் சொல்ல முடியாது. அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. உலகில் உள்ள வீரர்கள் அனைவரும் வீட்டில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் எப்படி வருவார்கள்,வீரர்கள் வரவில்லை என்றால் எப்படி கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது”என்றார். கங்குலி…

Read More