குளு குளு சிசன் குற்றாலத்தில்!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக பேரருவி, ஐந்தருவி, சிற்றருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் உள்ளது. குறிப்பாக விடுமுறை தினமான இன்று சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

கடந்த சில தினங்களாக பேரருவி, ஐந்தருவியில் தண்ணீர்வரத்து அதிகரித்தபோதிலும் பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் விழவில்லை. தற்போது பழைய குற்றாலத்திலும் தண்ணீர் விழத் தொடங்கியதையடுத்து அங்கும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இன்று அதிகாலை முதலே லேசான சாரல் மழையும், குளிர்ந்த காற்றும் வீசுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

Previous post பூச்சி தாக்காத தினை சாகுபடி
Next post பிரியாணி பிடிக்குமா? இதை படிங்க முதல்ல
%d bloggers like this: