உலகிலேயே மிகப் பழைமையான நாளிதழ் என்ற பெருமையைப் பெற்ற வியன்னாவைச் சேர்ந்த வியனர் செய்டங் என்ற நாளிதழ், வெள்ளிக்கிழமையுடன் வெளியீட்டை நிறுத்திவிட்டது.
கிட்டத்தட்ட 320 ஆண்டுகள் தொடர்ந்து நாளிதழை வெளியிட்டு வந்த அரசுக்குச் சொந்தமான நாளிதழ் நிறுவனம், நிதி நெருக்கடி காரணமாக, வருவாய் இழப்பை சந்தித்து, நாளிதழ் வெளியீட்டையே நிறுத்திவிட்டுள்ளது.
கடைசி நாளான வெள்ளிக்கிழமை, தனது நாளிதழின் முகப்புப் பக்கத்தில், 116,840 நாள்கள், 3,839 மாதங்கள், 320 ஆண்டுகள், 12 அதிபர்கள், 2 குடியரசுகள், 1 நாளிதழ் என தனது இதழுக்கு தானே இறுதி அஞ்சலி செலுத்திக் கொண்டது.
இந்த முகப்புப் பக்கம், டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு, தி வியனெர் செய்டங், உலகின் மிகப் பழமையான நாளிதழ், தனது கடைசி இதழை வெளியிட்டுள்ளது. இதுதான் இந்த நாளிதழின் கடைசி முகப்புப் பக்கம் என்று பதிவிடப்பட்டிருந்தது.