ரஜினி-  கமல் சேர்ந்து நடிக்க கதை ரெடி!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.

சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் சில சுவாரசிய விஷயங்களை கூறியுள்ளார்,  ரஜினி சாரும் கமல் சாரும் சேர்ந்து நடிக்கிற மாதிரி ஒரு கதைய நான் ரெண்டு பேர் இருக்கும் போதே சொன்னேன், அவங்க கதைய கேட்டுட்டு நடிக்க கிட்டதட்ட ஒத்துக்கிட்டாங்க. நான் சொன்ன கதை இரண்டு வயதான கேங்ஸ்டர்ஸ் அவர்களின் வாழ்க்கையை பற்றியானது. தற்பொழுது அவர்கள் இரண்டு பேருடைய பிசினசும் பெருசு. அவர்கள் தான் இதைப்பற்றி முடிவெடுக்க வேண்டும், ஆனால் இதை தற்பொழுது சாத்தியமாக்குவது கொஞ்சம் கஷ்டம்” என கூறியுள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading