விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) பயனாளிகள் தற்போது 18வது தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.6,000 நிதியுதவி வழங்குகிறது. இந்த நிதி முதலீட்டின் மூலம் விவசாயிகள் தங்களின் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
தற்போதுவரை விவசாயிகளின் கணக்கில் 17 தவணைகளை மத்திய அரசு நிதியை செலுத்தியுள்ளது. அடுத்த மாதம் 18வது தவணை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த முறை விவசாயிகள் சில புதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.
இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கு இ-கேஒய்சி(e-KYC) மற்றும் நிலச் சரிபார்ப்பை(land verification) அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. இந்த நடைமுறைகளை பின்பற்றாத விவசாயிகளுக்கு 18வது தவணையாக ரூ.2,000 கிடைக்காது என கூறப்படுகிறது.
e-KYC செயல்முறை மிகவும் எளிதானது. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட PM Kisan மொபைல் செயலியில் முக அங்கீகார அம்சம் (Face Authentication Feature) உள்ளது. இந்த அம்சத்தின் உதவியுடன், விவசாயிகள் தற்போது வீட்டில் அமர்ந்து OTP அல்லது கைரேகை இல்லாமல் முகத்தை ஸ்கேன் செய்து e-KYC மேற்கொள்ளலாம்.
PM கிசான் போர்ட்டலில், Know Your Status மூலம் உங்கள் Aadhaar seeding status-யை சரிபார்க்கவும். முழுமையான விவரங்களுக்கு PM Kisan-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.