பனாஸ்காந்தாவில் ரூ.325 கோடி பாரத் கால்நடை இனப்பெருக்க ஆராய்ச்சி மையம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் பனாஸ்காந்தா மாவட்டம் பில்டியில் அமைந்துள்ள பாரத் கால்நடை இனப்பெருக்க மற்றும் ஆராய்ச்சி மையத்தை (BBBRC) பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (அக்.30) திறந்து வைத்தார். நாட்டு மாட்டு இனங்களை மேம்படுத்துவதையும், பால் உற்பத்தியைப் பெருக்குவதையும் இந்த மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

“என்ன ஒரு அசாதாரண வசதி! பனாஸ்காந்தாவில் உள்ள பாரத் கால்நடை இனப்பெருக்க மற்றும் ஆராய்ச்சி மையம், கால்நடை வளர்ப்புத் துறையில் உள்ள மகத்தான வாய்ப்புகளை வெளிப்படுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

127 ஏக்கர் பரப்பளவில், ரூ.325 கோடி செலவில் பனாஸ் டெய்ரியால் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் (NDDB) தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. சோதனைக்குழாய் கருத்தரிப்பு (IVF) மற்றும் கரு மாற்றம் உள்ளிட்ட மேம்பட்ட இனப்பெருக்க தொழில்நுட்பங்கள் இங்கு பயன்படுத்தப்படும்.

கன்கிரேஜ், கிர், சாஹிவால், தார்பார்க்கர் உள்ளிட்ட நாட்டு மாட்டு இனங்கள் மற்றும் மெஹ்சானி, பன்னி, ஜாஃப்ராபாடி, முர்ரா உள்ளிட்ட எருமை இனங்கள் மீது இந்த மையம் கவனம் செலுத்தும். கால்நடை விவசாயிகளுக்கு தரமான விந்து, கருக்கள் மற்றும் இனப்பெருக்க சேவைகள் மலிவு விலையில் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடி பெண் பால் விவசாயிகளுடன் கலந்துரையாடி, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணை தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உடனிருந்தார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading