பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகையை லிட்டருக்கு ரூ.3லிருந்து ரூ.6ஆக இரட்டிப்பாக்குவதாக இமாசலப் பிரதேச அரசு வியாழக்கிழமை அறிவித்தது.
மேம்படுத்தப்பட்ட பால் ஊக்கத்தொகை திட்டத்திற்காக மாநில அரசு ரூ.14 கோடி ஒதுக்கியுள்ளது. இனி, அரசு சாரா பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் தகுதியான உற்பத்தியாளர்களுக்கு, நேரடி பயனாளர் பரிமாற்றம் (DBT) மூலம் லிட்டருக்கு ரூ.6 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
பால் உற்பத்தியாளர்களுக்கு லாபகரமான விலையை உறுதிசெய்தல், பால் கொள்முதல், பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. எனினும், தனியார் பால் கூட்டுறவு சங்கங்களுடன் தொடர்புடைய பால் உற்பத்தியாளர்களுக்கு இதுபோன்ற ஊக்கத்தொகை ஆதரவு முன்னர் கிடைக்கவில்லை.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
